குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் சில வகை ஐபோன்களை விற்பனை செய்ய தடை விதிக்குமாறு குவால்கொம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. குவால்கொம் நிறுவனம் உலகின் முதனிலை செல்லிடப்பேசி சிப் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சில வகை ஐபோன்களில் இன்டல், இன்பிரிங் சிக்ஸ் போன்ற சிப் வகைகள் பயன்படுத்தப்படுவதாகவும், காப்புரிமையின்றி இவை பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலகின் முதனிலை ஐபோன் உற்பத்தியாளர்களான அப்பிள் நிறுவனத்திற்கும் சிப் உற்பத்தியாளரான குவால்கொம் நிறுவனத்திற்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாட்டு நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் அப்பிள் நிறுவனம், குவால்கொம் நிறுவனத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்திருந்தது.
காப்புரிமை கொண்ட சில உதிரிப் பாகங்களை அனுமதியின்றி எப்பிள் நிறுவனம் பயன்படுத்தி வருவதாக குவால்கொம் குற்றம் சுமத்தியுள்ளது.