விளையாட்டு

இலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து திருப்தி அடைய முடியாது – அன்ஜலோ மெத்யூஸ்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து திருப்தி அடைய  முடியாது என அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வே போன்ற அணியொன்றுடன் 300 ஓட்டங்களை குவித்து தோல்வியடைவது என்பது பலவீனமான ஓர் நிலையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி டக்வர்த் என்ட் லுயிஸ் முறையில் நான்கு விக்கட்டுகளினால்   தோல்வியடைந்தது. அணியின் பந்து வீச்சு தொடர்பில் எவ்வித திருப்தியும் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் அணிக்கு தலைமை தாங்க முடியுமா என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும்  அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply