சிரியாவில் கடந்த ஆறாண்டு காலமாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் வகையில் போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று இன்று அமுலுக்கு வந்துள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் முதன்முறையாக சந்தித்துப் பேசிய நிலையில் சிரிய் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், அமெரிக்கா, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளின் முயற்சியால் சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இருதரப்பினரையும் வலியுறுத்தும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இந்த உடன்படிக்கையின்படி, உள்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து சிரியாவின் தென்மேற்கு பகுதியில் போர் அமுலுக்கு வந்தது.