குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்திற்கு எதிராக போராடப் போவதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் லிப்போல்டோ லோபிஸ் ( Leopoldo Lopez )தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய காரணத்தினால் லிப்போல்டோவுக்குக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்க்பபடுகிறது. இதுவரை காலமும் இராணுவ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லிப்போல்டோவின் ஆதரவாளர்கள் வீட்டுக்கு அருகாமையில் குழுமி தங்களது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ ( Nicolas Maduro ) க்கு எதிராக தொடர்ச்சியாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டுமென அவர் மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் கோரியுள்ளார்.