மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கின் மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 25-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் டார்ஜிலிங்கின் சோனாடா பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளுத.
ஏனினும் இந்தக் குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் சோதனைச் சாவடி, புகையிரத நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு ராணுவத்தினர் மீண்டும் குவிக்கப்பட்டனர்.
இதனைக் கண்டித்து ஜிஜேஎம் அமைப்பினர் பேரணி மற்றும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததனால் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.