குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் கோதபாய முன்னிலையாகியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தின் பின்னர் காங்கேசன்துறை சீமேந்து ஆலையின் இயந்திரங்களை பழைய இரும்பிற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.இது தொடர்பிலேயே அவர் முன்னிலையாகியுள்ளார்.
சுமார் 600 தொன் எடையுடைய இரும்பு இவ்வாறு மோசடியான முறையில் விற்பனை செய்பய்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடமும் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.