213
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில், 2 நாளில் மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
போஜ்புர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மின்னல் தாக்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று தலைநகர் பாட்னாவில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரோடஸ் மற்றும் வைஷாலி மாவட்டங்களில் தலா 5 பேர் மின்னலுக்கு பலியாகினர். ஆத்துடன் மேலும் பல பகுதிகளில் மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். இதுவரை 32 பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளதாக பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love