இலங்கை

உயர்தரப் பரீட்சை அனுமதிச்சீட்டுக்களை உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பணிப்புரை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அனுமதிச் சீட்டுக்கள் உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.எம்.என். புஸ்பகுமார பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை அனுமதிச்சீட்டுக்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த அனுமதிச் சீட்டுக்கள் உரிய முறையில் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 7ம் திகதி இந்த அனுமதிச் சீட்டுக்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிச் சீட்டுக்களும் நேற்றைய தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பரீட்சை அனுமதிச் சீட்டுக்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக அது குறித்து அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

பரீட்சை அனுமதிச் சீட்டுக்களை மாணவர்களுக்கு வழங்காது ஏதேனும் பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்நோக்க நேரிட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் அதிபர்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply