181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த மதம் குறித்த பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் ஐக்கியம் மற்றும் பௌத்த மதம் ஆகியனவற்றுக்கு அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் இதுவரையில் உத்தேச நகல் திட்டமொன்று கூட தயாரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாடு குறித்து தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் சரத்தக்களில் எவ்வித மாற்றங்களையும் செய்ய திட்டமிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love