உலகம்

சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம், சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்திருந்தமை தொடர்பில் இரகசியமான ஆதாரங்களை பரிசீலனை செய்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சவூதி அரேபியா, ஏமனுடன் யுத்தம் செய்து வருவதாகவும் அதனால் ஆயுதங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஆயுத விற்பனை சட்டவிரோதமான அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என நீதவான்களான Burnett மற்றும்  Mr Justice Haddon-Caveதெரிவித்துள்ளனர்.

தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுத விற்பனை ஏன் நியாயமானது என்பதனை வெளிப்படுத்த முடியாது எனவும் எனினும் ஆயுத விற்பனை சட்டவிரோதமானதல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply