176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லண்டனில் நடைபெற்ற அனிவர்சரி 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மோ பாரா (Mo Farah ) வெற்றியீட்டியுள்ளார். மோ பாரா நான்கு தடவைகள் ஒலிம்பிக் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 5000 மற்றும் 10000 மீற்றர் உலக சம்பியன்சிப் போட்டிகளிலும் பாரா பங்கேற்க உள்ளார்.
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பாரா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர் 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love