161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நான்கு சவூதி பிரஜைகளுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏமனின் சானா நீதிமன்றம் இந்த நான்கு சவூதி பிரஜைகளுக்கும் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது.
2014ம் ஆண்டில் 14 ஏமன் பிரஜைகளை தலை துண்டித்து கொலை செய்ததாக இந்த நான்கு சவூதிப் பிரஜைகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சவூதிப் பிரஜைகள் அல் கய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஏமன் மற்றும் சவூதி அரேபிய எல்லைப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 3 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love