குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கி மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலீல் ஷெட்டி (Salil Shetty ) தெரிவித்துள்ளார்.
துருக்கில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு எதிராக உலகத் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர் துருக்கியில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் உதாசீனம் செய்யப்படும் நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் துருக்கிப் பணிப்பாளர் Idil Eser கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சாலீல் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார்.
ஜெர்மனியின் ஹம்பேர்க்கில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.