200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் பல மாவட்டங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் கிளிநொச்சியிலும் வெளி மாவட்டங்களில் இருந்து இடங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளி மாவட்ங்களில் இருந்து பொது மக்கள் அதிகமாக வந்துசெல்கின்ற இடங்களில் நுளம்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் மாவட்டத்தினுள் டெங்குநோய் பரவலைத் தடுக்கும் நோக்குடன் வெளிமாவட்டப் பிரயாணம் செய்வோர் அதிகமாக வந்துசெல்லும் பகுதிகளான பிரதான பேரூந்து நிலையங்கள் புகையிரத நிலையங்கள் சந்தைகள் ஆகியவற்றில் விசேட புகையூட்டல் நடவடிக்கைகள் மூலம் நோய்க்காவி நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படும் பிரதேசங்களுக்குப் பல்வேறு தேவைகளுக்காகப் பயணம் செய்யும்போது டெங்குநோய்த் தாக்கத்திற்கு உள்ளாவது அவதானிக்கப்பட்டுவருகிறது. எனவும்இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் 09 டெங்கு நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இனங்கணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்றவேளை டெங்குத் தொற்றிற்கு ஆளாகியிருந்தனர். என அறியப்பட்டுள்ளது என்றும்
எனவே பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு உயிர்கொல்லியிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
1. எமது மாவட்டத்திலிருந்து டெங்குநோய்த்தொற்று அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு அவசியம் இன்றிப் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
2. டெங்குநோய்த்தொற்று அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு பயணம் செய்யும்போது நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்.
3. கிரமமான சிரமதான நடவடிக்கைகள் மூலம் உங்களது வீடுகள்இ அலுவலகங்கள்இபாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் அற்ற சூழலை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
4. உங்கள் பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் சிரமதான நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
5. காய்ச்சல் ஏற்படின் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை அணுகவும்.
6. கிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரி வேரவில் முழங்காவில் அக்கராயன்குளம் பளை தருமபுரம் ஆகிய சுற்றயல் வைத்தியசாலைகளிலும் மாவட்டப் பொது வைத்தியசாலை கிளிநொச்சியிலும் உரிய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார திணைக்கள் அறிவித்துள்ளது
Spread the love