224
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சுகாதார அமைச்சிடம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்குகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையில் விளக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Spread the love