இலங்கை

காஸ்மீரில் இந்து யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை கண்டனம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காஸ்மீரில் இந்து யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் மற்றும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னேவும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆறு பெண்களும் ஒரு ஆணும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers