211
ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அரச படையினருடனான சண்டையில் உயிரிழந்துள்ளதாக லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அரசுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது உடல் கிடைத்ததா? என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
அல்-பக்தாதியின் மரணத்தை ஐ.எஸ் இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாத இறுதியில் அல்-பக்தாதி மரணமடைந்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Spread the love