விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணித்தலைவர்  ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார்.
அவரது பணிக்காலம் கடந்த மாதம் நிறைவடைய இருந்த நிலையில் அணித்தலைவர்  கோஹ்லிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கும்ப்ளே தனது முடிவை மாற்றிக்கொண்டு, பயிற்சியாளர் பணியிலிருந்து விலகினார்.

இதனைத் தொடர்ச்து    புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களை இந்தி கிரிக்கெட் வாரியம் கோரியது.
ரவிசாஸ்திரி, வீரேந்திரசேவாக், டாம்மூடி, பில் சிம்மன்ஸ், ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்தனர்.  இந்தநிலையில் இன்று இரவு  . இந்திய அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் நடைபெற உள்ள, இந்தியா- இலங்கை போட்டிகளில் இருந்து ரவி சாஸ்திரி பணியை தொடங்குகிறார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply