குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது. பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கராவத செயற்பாடுகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் ரில்லர்சன் ( Rex Tillerson )அண்மையில் கட்டாருக்கு பயணம் செய்திருந்தார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டுப் படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.