179
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் சம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியாவின் அஸ்டாபென்கோவை 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தி வீனஸ் வில்லியம்ஸ் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதேவேளை பெண்கள் இரட்டையர் போட்டியின் 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ் இணை தோல்வி அடைந்துள்ளது. இவர்களை 6-2, 6-4 என்ற நேர் செட்டில் சுவிட்சலாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் சீனாவின் யங் ஜன் சான் ஜோடி வென்றுள்ளது.
Spread the love