குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மதவாத அரசியலை கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். விஹாரைகளை கட்டுப்படுத்தவோ அல்லது விஹாரைகளின் நடவடிக்கைகளில் தலையீடு செய்யவோ தமக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் பிக்குகள் முன்னணியின் பௌத்த தேரர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், நாமும் பௌத்தர்களே எனவும் தெரிவித்த பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகளவில் வாக்களித்தவர்கள் பௌத்தர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதவாத அடிப்படையில் அரசியல் நடத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் ஒரு சில தரப்பினர் பௌத்த மதம் தொடர்பில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.