இந்தியா

கோவாவில் 15 ஆண்டுகளாக வீடொன்றின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு


இந்தியாவின் கோவாவில் 15 ஆண்டுகளாக வீடொன்றின்   அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர்  உள்ளூர் மக்களின் தலையீட்டுக்குப் பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த சுனிதா வெர்லேக்கர் என்னும் குறித்த பெண்ணுக்கு தற்போது    45 வயதாகிறது எனவும் அதே வீட்டில் இருந்த சுனிதாவின் சகோதரர் அவருக்கு உணவளித்து வந்துள்ளார் எனவும் குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் காஷ்யப் டிதரிவித்துள்ளார்.

மேலும்  மீட்கும்போது அவர் உடை இல்லாமல் இருந்தார் எனவும்  அங்கு மின்சாரம் இருக்கவிலலை எனவும் தெரிவித்த அவர்  அறை முழுவதும் சிறுநீரின் துர்நாற்றம் உறைந்திருந்தது எனவும்  கதவில் உள்ள துவாரம் வழியாக அவருக்கு உணவளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுனிதாவின் நிலை குறித்து   தொண்டு நிறுவனம் ஒன்றின் வழியாக தமக்கு தகவல் கிடைத்ததனைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு பின்னர் அவர் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு    பின்னர் மாநில அரசுக்குச் சொந்தமான மனநல மற்றும் மனித நடத்தை நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் சுனிதாவின் சகோதரர் மோகன்தாஸ் வெர்லேக்கர் மீது 342-ம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply