161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியனவற்றுக்கு பொறுப்பான அமைச்சராக செயற்பட முடியாது என உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Spread the love