Home இலங்கைஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி

by admin

 
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினால் இன்றைய தினம் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைதியாக இருக்காமல் ஊமை இதயத்தை திறந்து அரசாங்கம் காரணத்தை அம்பலப்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் தேர்தலை நடத்துவதற்கு தேவையான வசதிகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த தேவையான அவகாசத்தை வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் தேர்தலை நடத்தாது தொடர்ச்சியாக இவ்வாறு காலத்தை கடத்துமாயின் அது ஜனநாயக விரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More