ஐஎஸ் அமைப்பிடமிருந்து ஈராக்கின் மொசூல் நகரை மீட்டுவிட்டதாக அரச படைகள் அறிவித்திருந்தாலும், அங்கே இன்னமும் மூவாயிரம் பேர் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பங்களிடமிருந்து பிரிந்த குழந்தைகள் உள்ளிட்ட இளம்பிராயத்தவர் அல்லது வயோதிகர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அழுகுரல் மட்டுமே அங்கே பல பகுதிகளிலும் எதிரொலிப்பதாக தமது செய்தியாளர்கள் தெரிவிப்பதாக பிபிசி செய்திச்சேவை தெரிவிக்கின்றது
மேலும் ஐஎஸ் அமைப்பினருக்கும் ஈராக்கிய இராணுவத்துக்கும் இடையில் இன்னமும் நகரின் சில இடங்களில் மோதல்கள் தொடர்வதாகவும் நகரில் இருந்து பாதுகாப்பு தேடிச்செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.