விளையாட்டு

பரா ஒலிம்பிக் வீரர் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மரணம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பரா ஒலிம்பிக் வீரர் அப்துல்லா கயாஜேய் (  (  Abdullah Hayayei )பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இரும்பு கூடு ஒன்று அப்துல்லா மீது வீழ்ந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லண்டனின் நியூகாம் லெஸெர் சென்ரர்( நேறாயஅ டுநளைரசந ஊநவெசந ) ல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரும்புக் கூடு தலையில் வீழ்ந்த அந்த இடத்திலேயே அப்துல்லா உயிரிழந்துள்ளார் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் பரா ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் மாஜிட் ராசீட் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றி தெரியவில்லை எனவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply