குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனிய அருங்காட்சியகமொன்றில் வைக்கப்பட்டிருந்த பாரிய தங்க நாணயமொன்றை கொள்ளயிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் நியூகொலன் ( Neukoelln மாவட்டத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இந்த தங்க நாணயம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஏணி ஒன்றைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் 21 அங்குலம் நீளமுடைய தங்க நாணயத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
24 கரட் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட இந்த நாணயத்தின் எடை 100 கிலோ கிராம ஆகும். இந்த தங்க நாணயத்தின் பெறுமதி சுமார் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. தங்க நாணயம் உருக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.