479
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில வரட்சி காரணமாக ஒன்பது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரட்சியான காலநிலை நிலவி வரும் பகுதிகளில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரட்சி காரணமாக நாட்டின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து எழுபத்து ஏழாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், அனுராதபுரம், கிளிநொச்சி, புத்தளம், வவுனியா மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Spread the love