167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடாது என கூறிய போதிலும், அமைச்சர்கள் வாகனங்களை இறக்குமதி செய்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை நிறுத்தப்படவில்லை என கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி அதிகாரிகள், பணியாளர்களின் காற்சட்டைகளை கழற்றுவதாகவும் இந்த சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love