விளையாட்டு

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முகுருசா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

 
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

முதல் அரையிறுதிப் போட்டியில்   ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முகுருசா, ஸ்லோவாகியாவின் மெக்டாலேனா ரிபாரிகோவாவை எதிர்கொண்டார். இதில் முகுருசா 6-1, 6-1 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் இரண்டு முறை விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply