169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அரைகுறை தீர்வுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது எனும் நோக்கில் தேசியம் சார்ந்து செயற்படுபவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
குற்றபுலனாய்வு துறையால் யாழ். ஊடகவியாளாலர் த. பிரதீபனுக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சிவாஜிலிங்கம் மே 8 ஆம் திகதி யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியளாலர் சந்திப்பில் கூறிய விடயம் தொடர்பில் வீடியோ பதிவுகளை கொண்டு வருமாறும் கோரப்பட்டுள்ளது.
மே 8ஆம் திகதி சொன்னதை யூலை 8ஆம் திகதி கேட்க காரணம் என்ன ? கடந்த காலத்தில் முதலமைச்சருக்கு நெருக்கடி ஏற்படுத்திய வேளைகளில், முதலமைச்சருக்கு ஆதரவாக நின்றதால் சிவாஜிலிங்கத்தை சிறையில் அடைத்து முதலமைச்சரை தனிப்படுத்த முயற்சியா ? அல்லது தமிழ் மக்களுக்கு அவர்கள் கொடுக்க போகும் அரை குறை தீர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடியவர்களை சிறையில் அடைத்து எதிர்ப்பு போராட்டத்தை முடக்க நினைக்கிறார்கள்
எம்மை சிறையில் அடைப்பதன் ஊடாக அரை குறை அரசியல் தீர்வை திணிக்க முடியாது அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை முன்னெடுப்பார்கள். என தெரிவித்தார்.
முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி இல்லையேல் முற்றுகை போராட்டம்.
அதேவேளை போரின் பின்னர் இலட்ச கணக்கான மக்கள் உயிரிழந்து பல்லாயிரக்கணக்கான அங்கவீனமாக உள்ளனர் மறுவாழ்வு மீள்குடியேற்றம் வாழ்வாதாரம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
முதலமைச்சர் நிதியத்தின் ஊடக புலம்பெயர்ந்த, மற்றும் உள்ளூர் மக்களின் நன்கொடைகள் மற்றும் நிதி பங்களிப்புடன் உதவும் நோக்குடன் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முயன்றோம்.
அதற்கு அனுமதி கிடைக்கவில்லை உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய சொன்னேன் ஒரு மாத காலம் பொறுக்க சொல்லி முதலமைச்சர் சொன்னார் இன்று ஒரு மாதம் கழித்தும் இன்னும் நிதியத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை
இதுவரை காலமும் உதவி வழங்கும் நாடுகளால் வழங்கப்பட்ட ஒரு லட்சம் கோடியில் ஆயிரம் கோடியை கூட மத்திய அரசு தரவில்லை
இவ்வாறு தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது. முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகம், ஆளூநர் அலுவலகம் மாவட்ட செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு , முற்றுகை போராட்டாங்களை முன்னெடுப்போம்.
அரசியல் தீர்வும் இல்லை வாழ்வாதாரமும் இல்லை இப்படியே அதனை தொடர அனுமதிக்க முடியாது. என மேலும் தெரிவித்தார்.
Spread the love