Home இலங்கை கல்வி அரசியல் மயப்படுத்தக்கூடாது :

கல்வி அரசியல் மயப்படுத்தக்கூடாது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கல்வியை அரசியல் மயப்படுத்தக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி நடவடிக்கைகளில் அரசியல் கலக்காமல் முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வி வாய்ப்புக்களை கொழும்பிற்கு மட்டும் வரையறுக்காது விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சந்தையை வென்றெடுக்கக்கூடிய மாணவர்களை பாடசாலையிலிருந்து வெளிக்கொணர வேண்டியது அவசியமானது எனவும்  இதன் ஓர் கட்டமாகவே 13 ஆண்டு கால பாடசாலைக் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More