இலங்கை

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதனை அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி கட்சியின் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ரத்தினபுரியில் நடத்தப்பட உள்ள நிலையில் ஜனாதிபதியின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அரசாங்கத்தில் இணைந்து நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போதைக்கு தீர்மானிக்க முடியாது எனவும் ஐந்து மாத காலப் பகுதியில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply