குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் குற்றச் செயல்கள் நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் நீடிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி பென் எம்மர்சன் இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது இந்த விடயங்களை கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச தரத்தைக் கொண்டமைந்ததாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.