Home இலங்கைஇணைப்பு2 – – பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – பென் எம்மர்சன்

இணைப்பு2 – – பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – பென் எம்மர்சன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென மனித உரிமைகள் மற்றம் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் கோரியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான பொறிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – ஐ.நா அதிகாரி

Jul 14, 2017 @ 14:34

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி பென் எம்மர்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விவகாரங்கள் குறித்த பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கால மாறு நீதிப்பொறிமுறைமை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பென் எம்மர்சன்  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More