191
இந்தியாவின் டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வீடொன்றின் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கும் பணியில் பணியில் ஈடுபட்டீரந்த போதே இவ்வாறு விஷவாயு தாக்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்த தொழிலாளர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர்.
அவர்களில் நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love