199
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் மனித பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற பாம் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 800 கொள்கலன் பாம் எண்ணெய் மனித பயன்பாட்டுக்கு பொருத்தமற்றது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் இவ்வாறு பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love