குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் வலுவாக முன்நகரும் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும் இந்த அரசாங்கம் வலுவாக முன்னோக்கி நகரும் என குருணாகல் பிரதேசத்திற்கு மேற்கொண்டிருந்த பயணமொன்றின் போது அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் சத்தமிட்டு அரசாங்கத்தை அச்சுறுத்துகின்றனர் எனவும் சிலர் அரசாங்கத்தை விட்டுப் போவதாக சத்தமிட்டு அச்சுறுத்தகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு எச்சரிக்கை விடுப்போர் விலகிச் செல்லப் போவதில்லை எனவும் அவ்வாறு சென்றாலும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.