சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வீ.பாலகிருஸ்னண் உத்தியோகபூர்வ பயணம் ஒன்ழற மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளார்.
நேற்று இரவு நாட்டுக்கு சென்ற இவர் எதிர்வரும் 21ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார். இக் காலப்பகுதியில் இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பலரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இன்று மாலை பாலகிருஸ்னண் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, பின்னர் இருவரும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, நாட்டுக்கு சென்றுள்ள சிங்கப்பூர் வௌிவிவகார அமைச்சர், வட பகுதிக்கு பயணம் செய்யவுள்ளதோடு, வடக்கு முதல்வர் மற்றும் ஆளுநருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை நாளை அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சரான ஜூலியா பினோப்பும் இலங்கைக்கு செல்லவுள்ளார்.
Add Comment