181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை, ஐ.நா அதிகாரி பார்வையிட யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சிறையில் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love