உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டத்தினால் வரவழைக்கப்பட்ட நோர்வே நாட்டு விசேட நிபுணரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கேற்ப பிரதான சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினை அடைப்பதற்கான செயற்பாடுகள் கடந்த ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் அழைப்பில் இலங்கைக்கு வருகைத்தந்த சுவிட்ஸர்லாந்து நாட்டு நிபுணரின் ஆலோனைகளுக்கமைய சுரங்க அகழ்வு இயந்திரத்திற்கு பொறுத்தப்படவேண்டிய பாகம், அவ்வியந்திரத்தை நிர்மாணித்த ஜேர்மன் நிறுவனத்தினால் இலங்கைக்கு எதிர்வரும் இரு நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாகம் பொருத்தப்பட்டதன் பின்னர் தேவையான மாற்றங்களை செய்வதற்காக குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளும் நாட்டிற்கு ஏற்கனவே வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன் நோர்வே அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ள விசேட பொறியியல் நிபுணரும் இலங்கைக்கு வருகைதந்து, குறித்த சுரங்கத்தினை அவதானித்ததுடன், ஏனைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் தனது சிபாரிசுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது