போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள், மகன்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் முறைகேடாக சொத்துகள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘பனாமாகேட்’ என்றழைக்கப்படும் இந்த ஊழல் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையிலேயே நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.