குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேலும் முன்னேற்றமடைய வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் எனினும் இன்னும் பல்வேறு விடயங்களில் மேலும் முன்னேற்றம் பதிவாக வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மேம்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 2016 முதல் 2019ம் ஆண்டு வரையில் பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் ஸரெலிங் பவுண்ட்களை வழங்கி வருவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.