Home இலங்கைபூண்டுலோயாவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பொருட் களஞ்சியங்கள் தீக்கிரை :

பூண்டுலோயாவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பொருட் களஞ்சியங்கள் தீக்கிரை :

by admin

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்தில் ஏற்பட்ட தீயால் இரண்டு பொருட் களஞ்சியங்கள் முற்றாக தீக்கிரையாகியதனால் பல இலட்சம் பெருமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன.

இன்று (21.07.2017) காலை 8.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற கணப்பொழுதில் பூண்டுலோயா அரச பஸ் டிப்போ ஊழியர்கள்¸ பொது மக்கள் ஆகியோர் பூண்டுலோயா பொலிஸாருடன் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதே நேரம் தீ வேறு கடைகளுக்கு செல்லாமல் இருக்க டோசர் உதவியுடன் தீ பரவுவதை தடுத்துள்ளனர். இந்த தீ; வீபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸ் சிரேஷ்ட பரிசோதகர் நிசாந்த சுரவீர தலைமையிலான குழு மேற்க் கொண்டு வருகின்றது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More