குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து நேற்று 21.07.2017 இரவு மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ 9 வீதி கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலை முன்பு யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கும் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கும் உட்பட்ட ஏ9 வீதியில் வீதியால் சென்ற பல வாகனங்களுக்கும் இனந்தெரியதவர்களால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இத் தாக்குதல் சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸாரல் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான சொந்தமான பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல்:-
Jul 21, 2017 @ 18:38
இலங்கை போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேருந்தின் மீது விசமிகளால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீதே இரவு 8.45 மணிஅளவில் கிளிநொச்சி ஆனந்த புரம் பகுதியில் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்தபோதும் சாரதி எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைத்து இத் தாக்குதல் இடம்பெற்றபோதும் விசமிகள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதோடு பேருந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
மேலும் பல வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. 2 டிப்பர் 1 தனியார் போக்குவரத்து பேருந்து 3 ஹயஸ்(சுற்றுலா வாகனம்) என்பவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.