வெளிநாடுகளில் சட்டவிரோதமாக இந்தியர்களால் 19 ஆயிரம் கோடி ரூபா கறுப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது என பாராளுமன்றத்தில் இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் 31 விவகாரங்களில் 72 புகார்கள், குற்றவியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி.(HSBC) வங்கியில் 628 இந்தியர்கள் கணக்குகள் வைத்துக்கொண்டு, கணக்கில் வராத 8 ஆயிரத்து 437 கோடி ரூபா பதுக்கி வைத்துள்ளதனையும் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது எனவும்ம் அவர் தெரிவித்தார்.
இவற்றில் 162 விவகாரங்களுக்கு 1,287 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 84 விவகாரங்களில் நீதிமன்றங்களில் 199 குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.