173
சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனை செய்த 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட போதை வஸ்துவான குட்கா விற்பனைக்கு எதிராக கடந்த 2 நாட்களாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சோதனையின்போது 12,305 குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தடையை மீறி தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love