அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு உத்தேசித்துள்ள அமைச்சர்கள் இந்த வாரத்தில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். அரசாங்கத்தை விட்டு விலகி எதிர்க்கட்சியில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக செயற்பட விரும்புவதாக அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர். எனினும் இவ்வாறு அரசாங்கத்தை விட்டு விலகுவது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் அல்ல என தெரிவித்துள்ளனர். சிரேஸ்ட அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாபா, சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரட்ன போன்றவர்களும் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் இதுவரையில் இழைத்துள்ள தவறுகள் குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்ட உள்ளதாக குறித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தை விட்டு விலகும் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்:-
149
Spread the love
previous post