இலங்கை

கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடிய நிலைமை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. உள்ளக கருத்து முரண்பாடுகளினால் இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் சாசனப் பேரவையிலிருந்து கூட்டு எதிர்க்கட்சி விலக வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையே இதற்கான அண்மைய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் சாசனப் பேரவையிலிருந்து விலக வேண்டுமென ஜே.என்.பி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அரசியல் சாசனப் பேரவையிலிருந்து விலகாது நாட்டுக்கு பாதகமான யோசனை முன்வைக்கப்பட்டால் அதனை எதிர்த்து போராட வேண்டுமென மற்றுமொரு தரப்பினர் கோரியுள்ளனர். இதன் காரணமாக முரண்பாட்டு நிலைமை வெடித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply