208
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலரின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் படுகாயம்மடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , பின்னர் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் சிலாபம் பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான உப பொலிஸ் பரிசோதகர் (சம்பவத்தின் போது சார்ஜென்ட் தர அதிகாரியாக இருந்தவர் உயிரிழந்த பின்னர் உப பொலிஸ் பரிசோதகராக தரம் உயர்த்தப்பட்டார்.) ஹேமாவகே ஹேமசந்திர என்பவராவர்.
பூதவுடல் பிரதே பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , இன்று மதியம் 01 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர் பூதவுடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
Spread the love